29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

🔥 Views : 6
👁 Reading Now : 52

🔊To listen to this news in Tamil, Please select the text.

தமிழகத்தின் சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் மூன்று இடங்களிலும், தென்காசியில் ஒரு இடத்திலும், கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடத்திலும் என.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளி படித்து வந்த கல்லூரியில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வந்ததாகவும், அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடைய 30 பேர் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் உக்கடம், டவுன்ஹால், போத்தனூர் போன்ற இடத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தென்காசியில் கடையநல்லூர் பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் திரு.வி.க. நகர், நீலாங்கரை உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles