31.7 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

31 டிரோன்களை சுட்டு வீழ்த்தி உக்ரைனின் தாக்குதல் முறியடிப்பு: ரஷ்யா அறிவிப்பு

🔥 Views : 22
👁 Reading Now : 36

🔊To listen to this news in Tamil, Please select the text.

உக்ரைன் ராணுவம் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 31 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையே 20 மாதங்களுக்கு மேல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரஷ்யாவின் எல்லை பகுதிகளில் உக்ரைன் ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில்,31 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யா நேற்று தெரிவித்தது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதங்கள் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதே போல் ரஷ்யாவின் மேற்கில் உள்ள உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமீயா மாகாணத்தில் ராணுவ வீரர்களை கொண்டு வந்து இறக்கும் உக்ரைனின் திட்டம் முறியடிக்கப்பட்டது என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா வெளியிட்டுள்ள இந்த செய்திகள் குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. அதே போல் உக்ரைன் அதிகாரிகளும் இது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles