
கெஅடிலான் . இளைஞர் அணி மாநாட்டில், கட்சியின் இளைஞர் அணி தலைவர் அக்மல் நசீர், தனது கொள்கை உரையில், முகமட்
அஸ்மின் அலி மற்றும் ஸூரைடா கமருட்டின் வகித்துவரும் அமைச்சர் பதவிகளை விமர்சித்தார்.
அனைத்து வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் தனது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டார், எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று கோரும் ஆன்லைன் மனுவை ஆதரிப்பதாக அக்மல் கூறினார்.
“பிரசாரனாவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய, தாஜுட்டினின் (எதிராக) மனுவிற்கு நெட்டிசன்களிடமிருந்து 139,000 கையெழுத்துக்கள் கிடைத்தன.
“இன்று, அஸ்மின் பதவி விலக 200,000 கையெழுத்துகளை நாம் காண்கிறோம்.
இந்த மனு, 200,000-ஐ தாண்டினால் பிரதமர் அஸ்மினை இராஜினாமா செய்ய உத்தரவு பிறப்பிப்பார என்பதைப் பார்ப்போம்,” என்று அக்மல் கூறினார்.
