33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

கெஅடிலான் கட்சி மாநாடு ஒத்திவைப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 69

கெஅடிலான் கட்சியின் 15ஆவது பேராளர் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மன்றம் கடிதம் வாயிலாகவும் சங்கங்களின் பதிவதிகாரி நேரிலும் வழங்கிய உத்தரவின் பேரில் இந்த மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளரும் இயக்குநருமான நிக் நஸ்மி நிக் கூறினார்.

மாநாடு முழு அளவில் இயங்கலை வாயிலாக நடத்தப்படும் பட்சத்தில் அதனை நடத்த தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று தேசிய பாதுகாப்பு மன்றம் கடந்த மாதம் 27ஆம் தேதி வழங்கிய கடிதத்திற்கு முரணாக இந்த உத்தரவு அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பிய போதிலும் பிறிதொரு தேதிக்கு மாநாட்டை ஒத்தி வைக்க கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவம் முடிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles