29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

மருத்துவமனையின் கார் நிறுத்தப் பகுதியில்; பூட்டப்பட்ட காருக்குள் இளம் பெண் இறந்து கிடந்தார்

🔥 Views : 7
👁 Reading Now : 54

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஈப்போ Raja Permaisuri Bainun மருத்துவமனையின் நிபுணத்துவ கிளினிக்கிற்கு முன்புறம் உள்ள கார் நிறுத்தும் பகுதியில் பூட்டியநிலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். நேற்று மாலை மணி 6.07 அளவில் தகவல் கிடைத்தவுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது பூட்டப்பட்டிருந்த Toyata Camry காரில் 20 வயது பெண் இறந்த கிடந்ததாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குனர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். சிறப்பு கருவியை பயன்படுத்தி அக்காரின் கதவை திறந்தவுடன் அப்பெண்ணின் உடலை பரிசோதித்த மருத்துவ அதிகாரிகள் அப்பெண் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். காரின் பின் இருக்கையில் தலையனையில் படுத்த வண்ணம் அப்பெண் இருந்ததாக நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் Sabarodzi குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles