28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவர் பொன்.வேதமூர்த்தி உலகத் தாய்மொழி நாள் வாழ்த்து

🔥 Views : 7
👁 Reading Now : 26

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி உலக தாய் மொழி நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக மக்களிடையே தாய்மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக மக்களால் பேசப்படும் எந்த மொழியும் இனி அழிந்துவிடக் கூடாது என்பதை நிலைநிறுத்தவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாள் உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.

ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது.

மனிதனின் கண்டுபிடிப்பில் முதன்மையானது மொழிதான். தகவல் பரிமாற்றத்தின் முதல் கருவி, உருவமில்லாத இந்த மொழிதான். எனவே, அனைவரும் தத்தம் தாய்மொழியை போற்றி, மற்ற மொழிகளை மதிக்கும் பரந்த சிந்தனையை இந்த பொன்னான நாளில் மனதில் பதிய வைப்போம் என்று இன்றைய தாய்மொழி தின வாழ்த்துச் செய்தியில் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles