28.8 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

மலேசிய இந்து சங்கத் தலைவர்உலக தாய்மொழி தின வாழ்த்து

🔥 Views : 12
👁 Reading Now : 48

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் அனைவருக்கும் உலக தாய்மொழி தின வாழ்த்து தெரிவிப்பதாக அதன் தேசியத் தலைவர் சிவநெறிச் செல்வர் தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் அவர்தம் தாய்மொழி பொன்போன்றது. இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. ஆனாலும், ஒருவருக்கு அவரின் தாய் மொழி உயிரைப் போன்றது.

உலகில் இனி எந்த மொழியும் அழிந்துவிடக் கூடாது என்னும் நோக்கில், ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு, பிப்ரவரி 21-ஆம் நாளை உலக தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தி உள்ளது.

அதற்கேற்ப மலேசியர்களாகிய நாமும் இந்த நாளின் உன்னதத்தைப் போற்றும் அதேவேளை, தாய்மொழியை போற்றி மற்ற மொழியை மதிக்கும் மாண்பை மனதிற்கொள்வோம் என்று சங்கபூஷன் தங்க கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles