28.8 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

மலேசியர்கள் மத்தியில் சமய ஒற்றுமையை வலுப்படுத்தும் விருந்து நிகழ்ச்சி

🔥 Views : 11
👁 Reading Now : 53

🔊To listen to this news in Tamil, Please select the text.

இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களிடையே சமய ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் விருந்து நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை அம்பாங் Raintree கிளப்பில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தித்திவங்சா Inter – Faith ஒருங்கிணைப்பாளர் திருமதி டாக்டர் புளோரென்ஸ் ஜோன்ஸ் ஏற்பாடு செய்த இந்த சமய ஒற்றுமை விருந்து நிகழ்ச்சியில் இந்து, புத்தமதம், சீக்கியர், முஸ்லிம், பஹாய், கிறிஸ்து உட்பட அனைத்து மதத்தினரும் கலந்து சிறப்பித்தனர்.

தித்தி வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தோட்டத் தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் கனி ஜோகாரி இந்த நிகழ்வுக்கு தலைமை ஏற்றார்.

மலேசியர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து சகோதரத்துவத்தை பேணும் வகையில் ஒற்றுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜோகாரி தமது உரையில் கேட்டுக் கொண்டார்.

மலேசிய திருநாட்டில் வாழும் அனைத்து இனங்களும் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் இந்த விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக டாக்டர் புளோரன்ஸ் ஜோன்ஸ் தெரிவித்தார்.

அனைத்து இனங்களையும் சேர்ந்த சமயத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles