28.8 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

மாணவர்களின் கல்வி மீது மைபிபிபி அதிக கவனம் செலுத்தும்!-டத்தோ மோகன் கந்தசாமி

🔥 Views : 11
👁 Reading Now : 22

🔊To listen to this news in Tamil, Please select the text.

மாணவர்களின் கல்வி மீது மைபிபிபி கூடுதல் கவனம் செலுத்தும் என்று அக்கட்சியின் உதவித் தலைவரும் சிலாங்கூர் மாநில தலைவருமான டத்தோ மோகன் கந்தசாமி தெரிவித்தார். பல்வேறு போராட்டம் மற்றும் வழக்குகள் மத்தியில் இப்போது மைபிபிபி புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றும் கட்சியாக மைபிபிபி விளங்குகிறது.
மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை தீர்க்க மைபிபிபி பாடுபடும். மக்களோடு மிகவும் அணுக்கமாக இருந்து மைபிபிபி சேவையாற்றும்.
மலேசியர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்களின் கல்விக்கும் நாங்கள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்போம் என்று காஜாங் ஒரியெண்டல் கிறிஸ்டல் ஹோட்டலில் கடந்த வாரம் உலு லங்காட் மைபிபிபி தொகுதி தலைவர் டாக்டர் சுரேந்திரன் மற்றும் பாங்கி மைபிபிபி தொகுதி தலைவர் குமார் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான விருந்துபசரிப்பு நிகழ்வில் மோகன் கந்தசாமி இவ்வாறு பேசினார்.
இதற்கிடையில் பேசிய உலு லங்காட் மைபிபிபி தொகுதி தலைவர் டாக்டர் சுரேந்திரன், உலு லங்காட் வட்டாரத்தில் நிறைய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கோவிட் தொற்று, வெள்ளம் ஏற்பட்ட கால கட்டங்களில் நிறைய உதவிகள் வழங்கப்பட்டன.


அண்மையில் செமினி சந்தையில் நாள்காட்டியை வழங்கும் பணியில் ஈடுபட்டு மக்களுடன் நேரடி சந்திப்பை நடத்தினர். உலு லங்காட்டிலுள்ள புகார் மையத்தில் நிறைய பேர் தங்களின் புகார்களைக் கொடுத்து வருகின்றனர்.
மைபிபிபி மக்கள் சேவை மையத்திலும் மக்களுக்கு நிறைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் அண்மையில் பூப்பந்து விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசாக 2,000 வெள்ளி ரொக்கம் வழங்கப்பட்டது. இப்போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதே சமயம் அண்மையில் மகளிருக்கான தன்முனைப்பு கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
“இதே போல் இன்னும் நிறைய புதிய திட்டங்களை நாங்கள் வைத்திருக்கிறோம், அவற்றை பாங்கி மைபிபிபி தொகுதி தலைவர் குமாருடன் இணைந்து நிச்சயமாக மேற்கொள்வோம்” என்று டாக்டர் சுரேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles