27.6 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

ஏப்ரல் 14-இல் தமிழ்ப் புத்தாண்டு இந்து சங்கம் அறிவிப்பு

🔥 Views : 9
👁 Reading Now : 32

🔊To listen to this news in Tamil, Please select the text.

நிகழும் சோபகிருது ஆண்டுக்குப்பின், புதிய குரோதி தமிழ்ப் புத்தாண்டு தினம் ஏப்ரல் 14 என்பதை மலேசிய இந்து சங்கம் உறுதி செய்கிறது.

2024 ஏப்ரல் 13-ஆம் நாள் முன்னிரவு 10:50 மணிக்கு இந்தக் குரோதி ஆண்டு தொடங்கினாலும், அடுத்த நாள் ஏப்ரல் 14, சித்திரை முதல் நாளில்தன் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது என்பதை மலேசியவாழ் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

மலரும் புதிய தமிழ்ப் புத்தாண்டில் அனைத்து மக்களும் குறிப்பாக இந்து சமுதாயம் அனைத்து வகையாலும் நலமும் வளமும் பெற்று இந்த மலேசியத் திருநாட்டில் வாழ்வாங்கு வாழ மலேசிய இந்து சங்கம் வாழ்த்துகிறது.

எப்ரல் 14-ஆம் நாள்.தமிழ்ப் புத்தாண்டு என்றாலும், இதற்குரிய புண்ணிய காலம் ஏப்ரல் 13-ஆம் நாள் மாலை 6:50 முதல் நள்ளிரவு 2:50 வரை தொடர்கிறது. இந்தக் காலத்தில், தீபம்-கும்பம் உள்ளிட்ட மங்கல அடையாளங்களை வணங்கி மாதா-பிதா-குரு ஆகியோரைத் தொழுது நல்லருள் நாடலாம்;

மறுநாள் வழக்கம்போல இல்லங்களிலும் ஆலயங்களிலும் வழிபட்டு இறைவன் அருளை நாடி புத்தாண்டு பலனைப் பெறலாம் என்றும் மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles