26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

பாலஸ்தீன மக்களுக்கு உதவ அரசிடம் இன்னும் நிதிகள் உள்ளது: பிரதமர்

🔊To listen to this news in Tamil, Please select the text.

பாலஸ்தீன மக்களுக்கு உதவ அரசிடம் இன்னும் நிதிகள் உள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பாலஸ்தீனியர்களுக்கான மனிதாபிமான பணிகளுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதற்குத் தயாராக  உள்ளது.

வடக்கு காசா பகுதியுடன் தனது எல்லை வாயில் வழியாக உதவிகளை வழங்க  இஸ்ரேல் அனுமதித்துள்ளது.

ஆகையால் பாலஸ்தீன மக்களுக்கு கூடுதல் உதவிகளை செய்ய முடியும் .

ஏனெனில் அதற்கான ஒதுக்கீடு இன்னும் அரசாங்கத்திடம் உள்ளது என்று அவர் கூறினார்.

கூடுதல் உதவிகள் இருக்கும் பட்சத்தில் கடவுள் அனுமதித்தால் அரசாங்கம் அந்த உதவிகளை வழங்கும்.

தற்போது நூற்றுக்கணக்கான லாரிகள் உதவிக்காக வரிசையில் நிற்கின்றன. மேலும் உதவி அதிகமாக உள்ளது.

ஆகவே மலேசியாவின் உதவிகள் பாலஸ்தீன மக்களுக்கு சென்றடைவதை அரசு உறுதி செய்யும்.

ஜார்ஜ்டவுனின் உள்ள பாயான் லெப்பாஸ் அரா ரிவர் அல் ஹுதா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் பிரதமர் மேற்கண்டவாறு செய்தியாளர்களிடம் கூறினார். – Nambikai

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles