26.4 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

மஇகா மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்: சரஸ்வதி அறிவிப்பு

🔥 Views : 9
👁 Reading Now : 27

🔊To listen to this news in Tamil, Please select the text.

மஇகா மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று கெமேலா சட்டமன்ற உறுப்பினர் என். சரஸ்வதி அறிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுப்பட்டு வருகிறேன். குறிப்பாக மஇகாவில் பல கட்ட பொறுப்புகளை வகித்துள்ளேன்.

பலக் கட்ட போராட்டங்களுக்கு பின் கெமேலா சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறேன்.

இந்த அரசியல் அனுபவத்தை கொண்டு இந்தப் பொறுப்பை ஏற்க நான்  தயாராக உள்ளேன்.

கட்சி உறுப்பினர்கள் , தலைவர்களுடன் சில விவாதங்களை நடத்தினேன். இந்த விவாதங்களுக்கு பின் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

ஆகையால் வரும் மஇகா மகளிர் தலைவர் பதவிக்கான தேர்தலில் நிச்சயம் போட்டியிட தயாராக உள்ளேன்.

இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜொகூர் மாநில மஇகா மகளிர் பிரிவு தலைவியான சரஸ்வதி மேற்கண்டவாறு கூறினார். – Nambikai

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles