
மித்ரா மூலம் மலேசிய இந்து சங்கத்திற்கு 35 லட்சத்து 80,000 வழங்கப்பட்டது.
மித்ரா வழங்கிய இந்தத் தொகையில் 1,158 ஆலயங்களுக்கு 25 லட்சம் வெள்ளி உதவித்தொகை வழங்கப்பட்டது. மித்ராவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீதமுள்ள 11 லட்சம் வெள்ளி மீண்டும் மித்ராவிடம் ஒப்படைக்கப்படும் என மலேசிய இந்து சங்கம் இன்று அறிவித்துள்ளது.
மீதமுள்ள உதவித்தொகை ஆலயங்களுக்கு வழங்கப்படாததற்கு சில ஆலயங்கள் உதவித்தொகை கோரவில்லை. மேலும் நிறைய ஆலயங்கள் முறையாக ஆர் ஓஎஸ் இலாகாவில் பதிவு செய்யவில்லை என்பதும் ஒரு காரணமாகும் என்று மலேசிய இந்து சங்கம் சங்கத்தலைவர் மோகன் ஷான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
