30.1 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

பத்திரிகைச் சுதந்திரத்தில் மலேசியா பெரும் சரிவு ; முந்தைய அரசாங்கத்தை விட மோசம் இல்லை என்கிறார் அமைச்சர் ஃபாஹ்மி

🔥 Views : 20
👁 Reading Now : 49

🔊To listen to this news in Tamil, Please select the text.

பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டுப் பட்டியலில் மலேசியாவின் தற்போதைய நிலை, முந்தைய அரசாங்கத்தை விட எவ்வளவோ பரவாயில்லை என்கிறார் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில்.

பத்திரிகைச் சுதந்திரத்தில் 107-வது இடத்திற்குச் சரிந்திருப்பது ஏமாற்றம் தான் என்றாலும், பலர் அலறுவது போல் அதுவொன்றும் படு பாதாள வீழ்ச்சி அல்ல என அவர் கூறிக் கொண்டார்.

“இதே 2021-ஆம் ஆண்டில் நாம் 119-வது இடத்தில் இருந்தோம்; 2022-ல் 13-வது இடத்தைப் பிடித்திருந்தோம். அவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த 107-வது இடம் மோசமானதல்ல” என ஃபாஹ்மி சொன்னார்.

எனினும், பத்திரிகைச் சுதந்திரம் மேம்பட வேண்டும் என்பதில் தமக்கு மாற்றுக் கருத்து இல்லை; அதற்குரிய நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என்றார் அவர்.

அதன் ஒரு பகுதியாக, நாட்டில் பொய்ச் செய்தி பரவலை முறியடிக்க தாமும் எல்லையில்லாத செய்தியாளர்களும் பல சுற்றுச் சந்திப்புகளுக்கும் கலந்தாய்வுகளுக்கும் இணங்கியிருப்பதாக அமைச்சர் கூறினார்.

வெள்ளிக்கிழமை வெளியான 2024-ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிகைச் சுதந்திர குறியீட்டுப் பட்டியலில், வெறும் 52.07 புள்ளிகளுடன் மலேசியா 73-வது இடத்தில் இருந்து 107-வது இடத்திற்குச் சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்தாண்டை விட இது 34 இடங்கள் சரிவாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles