
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
பெட்டாலிங் ஜெயா, மே 11:
மலேசிய இந்திய சமூகத்தின் வர்த்தக வட்ட அடையாளமாக 20-ஆம் நூற்றாண்டில் செம்மாந்து விளங்கிய வள்ளல் ரெங்கசாமி பிள்ளையின் (வள்ளல் ரெனா) அன்புத் துணைவியாரும் நிகழும் 21-ஆம் நூற்றாண்டில் அந்தப் பாரம்பரியத்தைத் தற்காத்துவரும் டத்தோ ரெனா இராமலிங்கம் உள்ளிட்ட தாமரைக் குழும இயக்குநர்களின் பாசமிகு தாயாருமான பார்வதி அம்மாளின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று மேத் திங்கள் 11-ஆம் நாள் சனிக்கிழமை பகலில் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்றது.

இதில், ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் செனட்டர் க.சரசுவதி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வர்த்தகப் பிரபலங்கள், டத்தோ கோபி, பி.மலையாண்டி உள்ளிட்ட தகவல்-ஊடகத் துறையினர், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், இனம்-மதம் கடந்த நண்பர்கள், ‘நவரசத் திலகம்’ சோ. பரஞ்சோதி உள்ளிட்ட கலைத்துறையினர், பொதுமக்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு ‘நினைவில் வாழும்’ பாரவதி அம்மாளுக்கு மரியாதை செலுத்தினர்.

(படங்கள்-பி.மலையாண்டி)
