
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஈஷா விவகாரத்தில் எனது கடமையை மட்டுமே செய்கிறேன் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இணைய பகடிவதைக்கு இலக்கான ஈஷா தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.
மரணமடைந்த ஈஷாவின் வீட்டிற்கு சென்றேன். அவரை தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினேன். நேற்று மீண்டும் சென்று ஈஷாவின் தாயாரை சந்தித்து உதவிகளை செய்தேன்.
அதே வேளையில் ஈஷாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
இதற்காக யாரும் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் எனது கடமையை மட்டுமே நான் செய்கிறேன்.
நாட்டில் இணையப் பகடிவதைக்கு இலக்காகி மரணமடையும் இறுதி நபராக இஷா இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தான் இவ்விவகாரத்தில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஃபஹ்மி கூறினார்.
