29.6 C
Kuala Lumpur
Saturday, January 24, 2026

Vetri

சட்டவிரோதமாக ஆஸ்ட்ரோ ஒளிபரப்பியதற்காக நாசி கண்டார் உணவகத்திற்கு 2 லட்சம் ரிங்கிட் அபராதம்

🔊To listen to this news in Tamil, Please select the text.

சட்டவிரோதமாக ஆஸ்ட்ரோ ஒளிபரப்பியதற்காக தஃக்வா நாசி கண்டார் உணவகத்திற்கு 2 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரோவின் துணை நிறுவனமான மீசாட் பிராட்காஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட உணவக நிறுவனம் 221,773.20 ரிங்கிட்டை செலுத்த ஒப்புக் கொண்டது.

தஃக்வா சில உணவகக் கிளைகளில் சட்டவிரோதமாக ஆஸ்ட்ரோ இணைப்புகளை வழங்கியதன் மூலம் சந்தா விதிமுறைகளை மீறியதற்காகத் தொகையைச் செலுத்த ஒப்புதல் தீர்ப்பின் மூலம் செய்யப்பட்ட தீர்வில் ஒப்புக் கொண்டது.

உணவகத்தில் இரண்டு வளாகங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் சந்தாக்கள் உள்ளன.

ஆனால் ஸ்மார்ட் கார்டுகள், ஆஸ்ட்ரோ டிகோடர்கள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி அனுமதியின்றி மற்ற எட்டு உணவகங்களில் ஆஸ்ட்ரோ இணைப்புகளை பெற்று ஒளிபரப்பியது.

ஆஸ்ட்ரோ விற்பனை, சந்தைப்படுத்தல் தலைவர் தாய் காம் லியோங் இதனை உறுதிப்படுத்தினார்.

இழப்பீட்டுத் தொகையைத் தவிர, ஆஸ்ட்ரோவின் பதிப்புரிமை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தனது ஆஸ்ட்ரோ சந்தா பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் தக்வா ஒப்புக் கொண்டது.

இதன் மூலம் ஆஸ்ட்ரோ டிஜிட்டல் திருட்டுக்கு எதிராக போராட உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles