34.8 C
Kuala Lumpur
Monday, August 24, 2026

Vetri

கால்வாயில் இருந்து 2 பெண்களின் சடலங்கள் மீட்பு: அலோர்ஸ்டாரில் பரபரப்பு

🔥 Views : 35
👁 Reading Now : 53

🔊To listen to this news in Tamil, Please select the text.

கால்வாயில் இருந்து 2 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அலோர்ஸ்டாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலோர்ஸ்டார் சுல்தான் அப்துல் ஹலிம் நெடுஞ்சாலைக்கு அருகே கைவிடப்பட்ட கட்டடத்தின் பின்புறம் உள்ள கால்வாயில் காயங்களுடன் இரு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

முழுமையாக ஆடை அணிந்திருந்த அந்த உடல்களை அடையாளம் காணப்படவில்லை.

ஆனால் அந்த உடல்கள் ஒரே குடும்பத்துடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.

கெடா மாநில போலிஸ்படையைச் சேர்ந்த தடயவியல் பிரிவு, மோப்ப  நாய் பிரிவு ஆகியவை விசாரணைக்கு அந்த இடத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இரவு 8.50 மணியளவில் காவல்துறை விசாரணை முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட உடல் சுல்தானா பஹியா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது.

கோத்தா ஸ்டார் போலிஸ் தலைவர் சித்தி நோர் சலாவதி சாட் இதனை உறுதிப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles