33.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

மலாயாப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் ஆய்வு இருக்கை அமைக்க இந்தியப் பிரதமர் மோடி கோரிக்கை: அன்வார் உடனடியாக ஒப்புதல்  

🔥 Views : 5
👁 Reading Now : 63

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க இந்தியப் பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார். அதற்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

மலேசியப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் உடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி வரலாற்று சிறப்புமிக்க திருவள்ளுவரின் பெயரில் ஆய்வு இருக்கை ஒன்றை மலாயா பல்கலைக்கழகத்தில் வைக்க வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக இந்தியாவிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வமான அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். 

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஏழு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இன்று கையெழுத்தானது. 

இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

முன்னதாக இரு தலைவர்களும் தமது அமைச்சரவை சகாக்களை அறிமுகம் செய்து வைத்தனர். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles