30.2 C
Kuala Lumpur
Thursday, July 10, 2025

Vetri

திருக்குறள் நெஞ்சம் தீமைக்கு அஞ்சும்: -மெந்தகாப்பில் வாழ்வியல் கருத்தரங்கம்

🔊To listen to this news in Tamil, Please select the text.

‘திருக்குறள் காட்டும் வாழ்வியல்’ என்னும் பெயரில் குறள்நெறிசார் கருத்தரங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணி அளவில் பகாங்கு மாநிலம், மெந்தகாப் நகர அம்னோ கட்டட மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதில், மலேசியத் தமிழ் நெறிக் கழக தேசியத் தலைவர் ‘தமிழ்க் கொழுந்து’ பாவலர் இரா. திருமாவளவனார், பேராசிரியர் காதர் இப்ராகிம் ஆகியோர் சொற்பெருக்காற்ற உள்ளனர்.

திருக்குறள் ஆசிரியர் கம்பார் கனிமொழி குப்புசாமி தலைமையேற்கும் இந்த நிகழ்ச்சியில், தமிழ் மணக்கும் கலைப் படைப்புகளும் இடம்பெறுகின்றன.

தமிழ் ஆர்வலர்களும் சமூக உணர்வாளர்களும் சுற்று வட்டார பொதுமக்களும் இதில் கலந்து இன்புறவும் பயன்பெறவும் அழைக்கப்படுகின்றனர்.

இந்த நிகழ்ச்சி குறித்த மேல் விவரத்திற்கு நா.புருசோத்தமன் (019-9554731), ச.பிரதாப் (012- 9642658) ஆகியோரை அழைக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles