
கிள்ளான், செப்.26:
அவியல், வறுவல், மசியல், துவையல் என்பதை அடிப்படையாகக் கொண்டது, தமிழர்தம் பாரம்பரிய சமையல் கலை. எண்ணெய்யே இல்லாமல், அடுப்பும் இல்லாமல் சுத்தமான உணவை சொந்தமாக சமைத்து சுவையாக உண்டு, சுகமான வாழ்க்கையை வாழும் அற்புதமான சமையல் கலையைப் பற்றி அறிந்துகொள்ள ‘அனைவரையும் அழைக்கிறார் ‘படையல் அகாடமி’ சிவா.
கிள்ளானில் Bandar Botanic வளாகத்தில் அமைந்துள்ள MICASA Event Space என்னும் இடத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 29-ஆம் நாள் ‘No Oil; No Boil’ என்னும் தலைப்பில் ‘அடுப்பில்லாமல் சமைக்கலாம் வாங்க’ என்னும் கருப்பொருளில் ‘படையல் அகாடமி’ நடத்த இருக்கும் இந்த வகுப்பில் கலந்துகொள்வோருக்கு ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை எண்ணய் இல்லாத இயற்கைமுறை சமையல் என்ற உண்மை நன்கு விளங்கும்
தமிழரின் பாரம்பரிய உணவானது பிட்டு, இட்லி, இடியாப்பம் போன்றவற்றை அவித்தல், கடலை-பருப்பு போன்ற தானியங்களை எண்ணையின்றி வறுத்தல், மசியலுக்காக இடித்தல், துவையல் போன்றவற்றுக்காக அம்மியில் அரைத்தல் ஆகிய முறைகளை அடிப்படையாகக் கொண்டது.
நாம் உண்ணும் உணவு எளிதில் சீரணிக்கக் கூடியதாகவும் நோய் நீக்கியாகவும் ஆரோக்கியத்தை அளிக்கவல்லதாகவும் இருக்க வேண்டும். தவிர, நாம் பருகும் நீர், சுவாசிக்கும் காற்று, சுற்றுச்சூழல், உணவு ஆகியவற்றால் ஏதேனும் கிருமியோ, ஒவ்வாமையோ அல்லது நோய்த் தொற்றோ ஏற்பட்டால் அவற்றை விலக்கி உடலுக்கு பாதுகாப்பை அளிக்கவல்லதாகவும் அமைந்துவிட்டால், அதுதான் சுத்தமும் சுகாதாரமும் கொண்ட சத்தான உணவாகும். முத்தான வாழ்வுக்கும் அதுதான் அடித்தளம்.
இத்தகைய மேலான உணவுமுறை குறித்து, கடந்த 10 ஆண்டுகளாகவே பேசியும் பயிற்சி அளித்தும் வருபவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ‘படையல் சிவா’.
இதன் தொடர்பில் எண்ணற்ற சமையல் வகுப்புகளையும் இல்லத்தரசிகளுக்கு நடத்தும் இவர், அண்மைக் காலத்தில் ஆண்களும் ‘படையல் வகுப்பில்’ நாட்டம் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார் ‘படையல் சிவா’; அண்மைய கொரோனா பருவத்தில்கூட இணைய வகுப்புகளை நடத்தியதாகவும் அதிக ஆதரவு கிடைத்ததாக்கவும் இவர் சொல்கிறார்.
இணையவழி இத்தகவலை அறிந்தோர் வெளிநாடுகளில் இருந்துகூட இந்த படையல் அகாடமியின் சமையல் வகிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும் அப்படிப்பட்டவர்களில் தானும் ஒருவர் என்கிறார் கிள்ளானைச் சேர்ந்த சுமதி விஜய். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த நம் உறவுகள் படையல் அகாடமி வழங்கும் பயிற்சிகளில் இணைந்து கற்று-தேர்ந்து-பின்பற்றி வருவதுடன் ஆரோக்கியமான வாழ்வை சுகமாக வாழ்ந்து வருகின்றனர் என்றும் குறிப்பிடுகிறார் பாரம்பரிய சித்த மருத்துவருமான சுமதி விஜய்.
தமிழ் நாட்டின் வர்த்தக நகரம் கோயம்புத்தூரில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படையல் அகாடமி சார்பில் நடைபெற்ற ‘No Oil; No Boil’ வகுப்பின் காணொளிக் காட்சியை ‘யூ ட்யூப்’ சமூக வலைதளத்தில் பார்த்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர் சுமதி விஜய்.
தாயகம் திரும்பியதும் தான்கற்ற இந்த உன்னத சமையற்கலையை மலேசியாவாழ் மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்; பயிற்றுவிக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இதன் தொடர்பில் ஏற்பட்டு செய்யப்பட்டுள்ள படையல் சமையல் வகுப்புதான் 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி முதல் ‘அடுப்பில்லாமல் சமைக்கலாம் வாங்க’ என்னும் கருப்பொழுருளுடன் நடைபெற இருக்கும் நேரடி வகுப்பு;
‘படையல் அகாடெமி’யின் படையல் சிவா தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் உறவுகள், ‘016-2226001’ என்னும் எண்ணில் அழைத்து மேல் விவரம் பெறலாம்.
வாருங்கள் அடுப்பில்லாமலும் எண்ணெய் இல்லாமலும் சமைக்க!
