
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டின் சோதனைச் சாவடிகள், எல்லை அமலாக்க துறையில் மூத்த அதிகாரிகளைப் பணியமர்த்துவதற்கான முன்மொழிவுக்கு உள்துறை அமைச்சகம் தயாராக உள்ளது என்று அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த அமலாக்கத் துறையில் பணிப்புரிய வரவேற்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் புதிய துறைக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையைப் பொது சேவை துறையிடம் விட்டுவிடுவதாக அவர் கூறினார்.
சோதனைச் சாவடிகள், எல்லை அமலாக்க துறையில் பணிப்புரிய 13,420 பேர் தேவைப்படுகின்றனர்.
புதிய துறையை உருவாக்குவதில் அரசாங்கம் தடைகளை எதிர்கொள்கிறது என்பதைத் தாம் மறுக்கவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
தகவல் தொழில்நுட்பம், எல்லைக் கட்டுப்பாடு போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் அதிகாரிகள் உள்ளனர்.
நிரந்தரப் பதவிகள் மட்டுமின்றி ஒப்பந்தப் பதவிகளுக்கும் அவர்களைப் பணியமர்த்த தயாராக இருப்பதையும் சைஃபுடின் சுட்டிக் காட்டினார்.
