
🔊To listen to this news in Tamil, Please select the text.
மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தூதரக அதிகாரிகளையும் அமெரிக்க பிரஜைகளையும் எச்சரித்துள்ளது.
அப் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
பயண ஆலோசனையை வெளியிட்டு, அமெரிக்க தூதரகம் சந்தேகப்படும்படியான எதையும் கண்டால் 119 என்ற எண்ணிற்கு உடனடியாக அழைக்குமாறு அது அறிவித்துள்ளது.
அந்தப் பகுதியில் அதிக அளவில் இஸ்ரேலியர்கள் சுற்றித் திரிவதால் அந்தப் பகுதி தாக்கப்படலாம் என்று அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
தாக்குதல் நடந்தால் அமெரிக்கர்களுக்கும் கடும் பாதிப்பு உண்டாகலாம் என்று தூதரகம் அச்சம் கொண்டுள்ளது என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
