28.5 C
Kuala Lumpur
Sunday, June 28, 2026

Vetri

யூ மொபைலின் மதிப்பீட்டு பணியில் அமைச்சரோ அல்லது துணை அமைச்சரோ ஈடுபடவில்லை: ஃபஹ்மி ஃபாட்சில்

🔥 Views : 8
👁 Reading Now : 29

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசியாவின் இரண்டாவது 5ஜி அலைக்கற்றல் வழங்குநராக யூ மொபைல் நிறுவனத்தைத் தேர்வு செய்யும் மதிப்பீட்டில் தானும் தனது துணையமைச்சர் தியோ நீ சிங்கும் ஈடுபடவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார். 

மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் மதிப்பீட்டை சுயாதீனமாக ஆய்வு செய்தது என்று ஃபஹ்மி கூறினார்.

அதன் அடிப்படையில், மலேசியாவின் இரண்டாவது 5ஜி அலைக்கற்றல் வழங்குநராக யூ மொபைலைத் தேர்ந்தெடுக்கும் முடிவு தனிநபர் உரிமத்திற்கான சிறப்பு உரிம நிபந்தனைகளுக்கு எதிரானது அல்ல என்று ஃபஹ்மி விளக்கமளித்தார். 

மலேசியாவின் இரண்டாவது 5ஜி அலைக்கற்றலைச் செயல்படுத்தும் மொபைல் அலைக்கற்றல் ஆபரேட்டரை (MNO) தேர்ந்தெடுக்க மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் மூலம் அரசாங்கம் தொழில்நுட்ப மற்றும் வணிக அம்சங்களிலிருந்து விரிவான செயல்முறையை செயல்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்வு டெண்டர் செயல்முறை மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டாவது 5ஜி அலைக்கற்றலைச் செயல்படுத்த மத்திய அரசு யூ மொபைலுக்கு உரிமம் வழங்கியதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர்  ஹசன் அப்துல் கரிம் கேட்ட கேள்விக்குத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles