28.5 C
Kuala Lumpur
Sunday, June 28, 2026

Vetri

பத்து மஇகா தொகுதியின் தீபாவளி விருந்துபசரிப்பு!

🔥 Views : 21
👁 Reading Now : 59

கிளைத் தலைவர்களின் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் பத்து மஇகா தொகுதி தீபாவளி உபசரிப்பை நடத்தியது. தேவான் செந்தூல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசிய தலைவர் டான் ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூட்டரசு பிரதேச மஇகா தலைவர் ராஜா சைமன் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

பத்து மஇகா தொகுதி தலைவர் பாலகுமாரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தலைவர்களின் சேவைகளை அங்கீகரிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே நெருங்கிய நல்லுறவும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தபட்டது. பல்வேறு வகையான மலேசிய உணவு வகைகள் பரிமாறப்பட்டதுடன் அதிர்ஷ்டக் குழுக்கும் இந்த நிலத்தில் இடம்பெற்றது. இதில் முதலாவது பரிசு மேடானுக்கும் இரண்டாவது பரிசு லங்காவிக்கும் தலா நால்வருக்கு வழங்கப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles