
கடந்த மே மாதம் 24ஆம் தேதி இரவு 8.33 மணிக்கு கிளானா ஜெயாவில் இரண்டு எல் ஆர் டி ரயில்கள் மோதிக் கொண்டன. இந்த சம்பவத்தில் 213 பயணிகள் காயமடைந்தனர். நாட்டில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த ரயில் விபத்து தொடர்பில் முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எல் ஆர் டி ரயில் விபத்து மீதான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.
