
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டின் 6 மாநிலங்களில் வெள்ள நிலை மேலும் மோசமடைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்த ஆறு மாநிலங்களிலும் 35,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் பிரிவின் அறிக்கையின் தகவலின் அடிப்படையில்,
கிளந்தான், திரெங்கானு, பெர்லிஸ், கெடா, ஜொகூர், பேரா ஆகிய இடங்களில் மொத்தம் 305 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் ஆக அதிகமாக 29,113 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம் மாநிலத்தில் பாசிர் மாஸ், கோல கிராய், ஜெலி, மாச்சாங், கோத்தாபாரு, தானா மேரா, பாசிர் பூத்தே, பாச்சோக், தும்பாட் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 305 நிவாரண மையங்கள் திறக்கப்ப்பட்டுள்ளது.



