30.1 C
Kuala Lumpur
Sunday, June 28, 2026

Vetri

விமரிசையாக நடைபெற்ற கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தீபாவளி விருந்து நிகழ்ச்சி!

🔥 Views : 7
👁 Reading Now : 52

பெட்டாலிங் ஜெயா, நவ 28-
கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தீபாவளி விருந்து நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் விமரிசையாக நடைபெற்றது.

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஸ் இராகவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிறப்பு வருகை தந்த விருந்து நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ப. சகாதேவன், லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், டான்ஸ்ரீ பூவன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் செயலாளர் மோகனா சின்னத்தம்பி வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த விருந்து உபசரிப்பு இனிதே நிறைவுற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles