
நாடு முழுவதும் மொத்தம் 7,779 கூட்டுறவு கழகங்கள் தங்கள் கணக்குகளை புதுப்பிக்கத் தவறியுள்ளன.
மேலும் 2,304 கூட்டுறவு கழகங்கள் தணிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
இருப்பினும், மலேசிய கூட்டுறவு ஆணையம் கூட்டுறவு நிதி மேலாண்மை சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்து வருகிறது.
குறிப்பாக கணக்கு அறிக்கைகளைத் தயாரிப்பதில் வழிகாட்டுதல், பயிற்சி வழங்குவதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்த்துள்ளது.
சமீபத்தில் மலேசியாவில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு தணிக்கை, கணக்கியல் மேலாண்மைக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
தீபகற்ப மலேசியாவுக்கு 3,000 ரிங்கிட்டும் சபா, சரவாக்கிற்கு 3,500 ரிங்கிட்டும் நிதியுதவியாக வழங்கப்பட்டது.
வழக்கமான கணக்கு அறிக்கைகளை வழங்கத் தவறிய கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை, தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சின் அணுகுமுறை குறித்து பெதோங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரிச்சர்ட் ராபுவின் கூடுதல் கேள்விகளுக்கு டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு பதிலளித்தார்.
மொத்தத்தில், நாடு முழுவதும் 16,009 பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
அவற்றில் 9,823 இன்னும் செயல்படுவதாகவும் டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
