29.7 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

மலேசிய அழகு ராணி போட்டியில் தில்லுமுல்லுகள்!

இந்திய பெண்மணி ஒருவரின் நிறுவனத்தால் நடத்தப்படும் அழகு ராணி போட்டியில் தில்லுமுல்லுகள் இடம் பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண்மணி நந்தினி உத்தம புத்திரன் இன்று நேரடியாக குற்றம் சாட்டினர்.

அழகு ராணி போட்டியில் குமாரி பிரிவில் திருமதியை இணைந்து கொண்டு அவரை வெற்றியாளராக தேர்வு செய்தனர்.

மேலும் அதிகம் டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர் முதல் மூன்று இடங்களில் அழகு ராணியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

அழகு ராணி போட்டிக்குரிய விதிமுறைகளை மீறி அழகு ராணி போட்டி நடத்தப்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினர்.

அழகு ராணி ஏற்பாட்டாளர் விடீயோ காணோலி மூலம் பேசும் காட்சிகளையும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போட்டு காண்பிக்கப்பட்டது.

அழகு ராணி போட்டியில் நடக்கும் தில்லுமுல்லுகள் மற்றும் அதிக டிக்கெட் விற்பனை செய்பவர் மட்டுமே அழகு ராணியாக தேர்வு செய்யப்படுவது தொடர்பில் தாம் போலீசில் புகார் செய்திருப்பதாக நந்தினி தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

பகாங் மாநில முன்னாள் சபாய் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உரிமை இயக்கத்தின் உதவித் தலைவர் மாண்புமிகு காமாட்சி, சிலாங்கூர் மாநில உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அழகு ராணி போட்டிக்கு என்று ஒரு தனி மகாத்துவம உள்ளது.
ஆனால் இன்று யார் அதிக டிக்கெட் விற்று தருகிறார்கள் அவர்களை அழகு ராணியாக தேர்வு செய்யப்படுவது கேலிக்கூத்தாக இருக்கிறது என்று குணசேகரன் தெரிவித்தார்.

இதனிடையே இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வழக்கறிஞர்
Chetna Brimohan இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடுக்கப்படும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles