29.6 C
Kuala Lumpur
Saturday, January 24, 2026

Vetri

அமைச்சரின் மகன் மீதான மிரட்டல் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை அரசு துணை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும்!

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான ஓர் அமைச்சரின் மகனும் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்ட குற்றவியல் மிரட்டல் வழக்கு தொடர்பான விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அரச மலேசியக் காவல்படையின் தலைவர் தான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார். 

ஜனவரி 1-ஆம் தேதி இது குறித்துப் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விசாரணை நிறைவடைந்து அதன் அறிக்கை திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார். 

இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட யாருடனும் காவல்துறை 
சமரசம் செய்து கொள்ளாத என்று அவர் குறிப்பிட்டார்.

வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஸாருடின்  கூறினார்.

அமைச்சரின் மகன் அந்தப் பெண்ணை மணந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நடந்துகொண்டிருக்கும் விசாரணையை வலுபடுத்த அவர்களின் திருமணச் சான்றிதழின் உறுதிப்படுத்தலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.

அமைச்சர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட யாரும் சட்ட நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்று ரஸாருடின் குறிப்பிட்டார்.

குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles