
மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலுக்கு இன்று ஜும்மா தொழுகையை முன்னிட்டும் பிரதமர் அன்வர் இப்ராகிம் வருகை புரிந்தார். அவர் சிறப்பு தொழுகையும் செய்தார். அதிகமான இந்திய முஸ்லிம் வியாபாரிகளும் மற்ற அந்நிய நாட்டு தொழிலாளர்களும் இத்தொழுகையில் கலந்து கொண்டனர்.

இங்கு கெபிமா ஆலோசகர் காதர் முகமட் அலி கலந்து கொண்டு பிரதமரை வரவேற்றார். அவர் கூறும் போது நீண்ட காலத்துக்குப் பிறகு மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலுக்கு நமது பிரதமர் வந்துள்ளார். இது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும். அவர் வந்து இங்கு தொழுகையும் செய்தார். அவருக்கு அனைவரும் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோல இங்கு உள்ள வியாபாரிகள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து இந்த சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர் என்றார்
