26.8 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

புதிய பொருளாதாரக் கொள்கை என்றென்றும் நடைமுறையில் இருக்க முடியாது: துன் மகாதீர்

🔥 Views : 36
👁 Reading Now : 44

புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் பூமிபுத்ராக்களுக்கான உறுதியான நடவடிக்கை என்றென்றும் நடைமுறையில் இருக்க முடியாது,

படிப்படியாக அதை அகற்ற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது கூறினார்.

புதிய பொருளாதாரக் கொள்கை ஓரளவு வெற்றியைப் பெற்றுள்ளது.

கடந்த 1971இல் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை இல்லாவிட்டால் மலாய்க்காரர்களுக்கும் பிற இனங்களுக்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரியதாக இருந்திருக்கும்.

இது சமூகங்களுக்கு இடையே பதற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

இருந்தாலும் மலேசியாவில் இன அடிப்படையிலான உறுதியான நடவடிக்கை இன்னும் தேவை.

அதே வேளையில் புதிய பொருளாதர கொள்கையை ஒழிக்க வேண்டிய ஒரு காலம் வரும் என்றும் அவர் கூறினார்.

வணிகம், தொழில்முனைவோர் துறையில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெற்றி பெற்ற பல மலாய் பிரமுகர்கள் இப்போது உள்ளனர்.

இருப்பினும் அவர்களில் பெரும்பாலோர் தோல்வியடைந்தனர்.

ஏனெனில் அவர்களின் கலாச்சாரம் ஒரு வணிகத்தை நிர்வகிப்பதற்கான தேவைகளுக்கு பொருந்தாது என்று துன் மகாதீர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles