26.1 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

சுபாங் ஜெயா தொகுதி முயற்சியில் 12 எல்.ஆர்.டி. தூண்களில் சுவர் ஓவியம்

🔥 Views : 26
👁 Reading Now : 50

இங்குள்ள செக்சன் 15 (எஸ்.எஸ்.15) எல்.ஆர்.டி.
இலகு ரயில் நிலையத்தின் 12 தூண்கள் சுவர் ஓவியங்களால்
அழகுப்படுத்தப்பட்டுள்ளன.

தொகுதி சேவை மையம், பிராசாரான மலேசியா பெர்ஹாட் மற்றும்
ஃபிட்லைன் அண்ட் குயெஸ்ட் ஸ்டூடியோ ஆகிய தரப்பிரின் கூட்டு
முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட ‘சாங் செனி 15‘ எனும் இத்திட்டத்திற்கு
62,000 வெள்ளி செலவு பிடித்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
மிஷெல் இங் மேய் ஷி கூறினார்.

உள்ளுர் ஓவியர்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் பொது சொத்துகளை
சேதப்படுத்தும் செயல்களை தடுப்பது ஆகிய நோக்கங்களின்
அடிப்படையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஓவியம்
சாலையைப் பயன்படுத்துவோர் மற்றும் பாதசாரிகளுக்கு மகிழச்சியை
ஏற்படுத்தும் என நாம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

எஸ்.எஸ்.15 பகுதி சமீபத்திய மாற்றங்களுக்கு ஏற்ற இடமாக
விளங்குவதால் சுவர் ஓவியத் திட்டத்திற்கு இந்த இடத்தை
தேர்ந்தெடுத்தோம். இதர இடங்களிலும் இத்திட்டத்தை தொடர
திட்டமிட்டுள்ளோம் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக அவர், பிரசாரான இண்டர்கிரேட ட் டெவலப்மெண்ட் சென்.
பெர்ஹாட் நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல்முறை அதிகாரி
அசோக் பஞ்சலிங்கத்துடன் இணைந்து இந்த சுவர் ஓவியங்களைப்
பார்வையிட்டார்.

இதனிடையே, இந்த சுவர் ஓவியத் திட்டத்தில் ஆறு உள்நாட்டு ஓவியர்கள்
பங்கு கொண்டதாக இத்திட்டத்தின் கண்காணிப்பாளர் எம். பிர்டாவுஸ்
ஓமார் கூறினார்.

இந்த ஓவியத்தை வரைவதற்கு தினமும் 12 மணி நேரத்தை நாங்கள்
செலவிட்டோம். வாகனப் போக்குவரத்தினால் ஏற்படும் ஆபத்து மற்றும்
நிச்சயமற்ற வானிலை போன்ற சவால்களையும் நாங்கள்
எதிர்கொண்டோம் என அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles