
வெட்டி பசங்க, விளையாட்டுப் பசங்க போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த வீடு ப்ரோடெக்ஷன் தயாரிப்பில் வெளிவரவுள்ள தமிழ் ஸ்கூல் பசங்கள் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி ஜிஎஸ்சி திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் அதிகமான உள்நாட்டு கலைஞர்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு வருகையாக டத்தோஸ்ரீ சரவணன், டத்தோ மோகன் லோட்டஸ் பைவ் ஸ்டார் நிர்வாகி கருணாமூர்த்,தி தமிழ் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். டெனிஷ் குமார் நடிப்பில் வெளிவந்த இத்த திரைப்படம் ரசிகர்களையும் மாணவர்களையும் கவர்ந்துள்ளது. அனைத்து தரப்பினரும் பார்க்குமாறு இயக்குனர் ஷான் இயக்கி உள்ளார். திரைப்படத்தை தினேஷ் குமார் விமலா பெருமாள் தயாரித்து உள்ளனர். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை கலகலப்பாகவும் செண்டிமெண்ட் காட்சிகளையும் கொண்டுள்ளது.

அந்த காலத் தோட்டத்தில் பள்ளிகளில் நடக்கும் விஷயங்களை துல்லியமாக படம் எடுத்துக் காட்டியுள்ளார் இயக்குனர். சிறப்பான முறையில் அனைத்து கலைஞர்களும் நடித்துள்ளனர். முக்கியமாக டேனிஷ்குமார் பள்ளிக்கூட வாத்தியாராக சிறப்பான நடிப்பை தந்துள்ளார். அதுபோல ஆசிரியராக வரும் திவ்யா சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். பள்ளிக்கூட மாணவர்களும் சிறப்பான நடைபெறும் நடிப்பை தந்துள்ளனர். மொத்தத்தில் அனைவரும் பார்க்கும் படமாக இந்த படம் அமைந்துள்ளது. திரையரங்குகளில் வெற்றி நடை போட போல உள்ள இத்தனை படத்தை திரையரங்குகளில் கண்டு ரசிக்குமாறு தயாரிப்பாளர் விமலா பெருமாள் கேட்டுக்கொண்டார. இந்நிகழ்வில் 700 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இத்திரைப்படத்தின் உத்தியோகபூர்வ இணையதள ஊடகமாக AST News விளங்குகிறது. இதற்கான சான்றிதழ் நிருபர் முருகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.