32.4 C
Kuala Lumpur
Friday, June 26, 2026

Vetri

தேசிய முன்னணிக்கு பிபிபி கட்சி முழு விசுவாசமாக இருக்கிறது! டத்தோ டாக்டர் லோகபாலா

🔥 Views : 35
👁 Reading Now : 27

கோலாலம்பூர் ஜன 19-
தேசிய முன்னணி கூட்டணியில் பிபிபி கட்சியின் நிலை குறித்து ஒரு முடிவை வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.

தேசிய முன்னணி கூட்டணியில் நாங்கள் இடம் பெற்றிருக்கிறோம் அல்லது இல்லையா என்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

காரணம் காலங் காலமாக தேசிய முன்னணிக்கு பிபிபி. கட்சி முழு விசுவாசமாக இருந்து வருகிறது.

பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிக்காக பிபிபி கடுமையாக உழைத்து இருக்கிறது.

அந்த வகையில் தேசிய முன்னணியிடம் இருந்து தெளிவான பதிலை எதிர்பார்க்கிறோம்.

தேசிய முன்னணி கால அவகாசம் தேவை என்று அறிவித்துள்ளது .

அதுவரை நாங்களும் பொறுத்து இருப்போம் என்று அவர் சொன்னார்.

இன்று பிபிபி கட்சியின் உச்ச மற்ற கூட்டத்திற்கு பின்னர் அவர் ஊடகவியலாளரிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles