
அமெரிக்காவில் பொற்காலம் துவங்யுள்ளதாக அதிபர் டிராம்ப் பேசினார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றவுடன் அதிபர் டிரம்ப் பேசியது: அமெரிக்காவில் பொற்காலம் துவங்கியுள்ளது. அமெரிக்காவில் நடந்த இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள முந்தைய ஜோபைடன் நிர்வாகம் தவறிவிட்டது. அமெரிக்க மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர தவறிவிட்டது. இனி ஒவ்வொரு பேரிடரையும் கவனத்துடன் எதிர்கொள்வோம். அமெரிக்காவை மிகவும் சிறந்தததாக்க நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
இதுவரை இல்லாத அளவில் வலுவானதாக அமெரிக்கா மாறும். அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டளிக்கப்படும். உலகம் முழுமைக்கும் நமக்கு மதிப்பு அளிக்கப்படும். அமெரிக்காவே முதலில் என்ற நிலையை ஏற்படுத்துவோம். அமெரிக்காவே இதுவரை இல்லாத வகையில் வளர்ந்ததாகவும், முன்னேற்றமடைந்ததாகவும் மாறும்.
சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலும் ஒழிப்போம். சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்போம். அரசியல் சாசனத்தை மதித்து நடப்போம். நாட்டையும் மறக்கமாட்டோம்.
டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்பிற்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ‛‛எக்ஸ்” தளத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப்பிற்கு எனது வாழ்த்துக்கள். இனி வரும் காலம் வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கும் பயனளிப்பதற்கு இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன். இவ்வாறு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
