
கோலாலம்பூர் ஜன 25-
பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா தலைமையில் இன்று பிபிஆர் துன் ரசாக் குடியிருப்பு பகுதியில் தைப்பொங்கல் தமிழர் திருநாள் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் ஜோனதன் ஜோர்ஜ் மற்றும் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மகளிர்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.

சிறுவர்கள் பங்கேற்கும் வகையில் ஒவிய போட்டி மற்றும் பெண்கள் பங்கேற்கும் வகையில் கோலப் போட்டியும் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தைப்பொங்கல் விழா நாடு தழுவிய அளவில் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என்று டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா தெரிவித்தார்.
