28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

அரிசி பிரச்சினைக்கு மக்களவையில் பதிலளிக்க தயார்: மாட் சாபு

🔥 Views : 8
👁 Reading Now : 54

அரிசி பிரச்சினை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் மக்களவையில் பதிலளிக்க தயார்.

வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மத் சாபு இதனை கூறினார்.

அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் மக்களவை அமர்வில் உள்ளூர் நெல், அரிசி பிரச்சினை தொடர்பான  கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக உள்ளேன்.

அதே வேளையில் தற்போது ​​உள்ளூர் அரிசி விநியோகம், நெல் கொள்முதல் விலைகள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க அனைத்து பங்குதாரர்களுடனும் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிக்க அமைச்சு முயற்சிக்கும்.

நெல்லின் தேவைக்கு ஏற்ப விலை எந்த அளவிற்கு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

ஆனால் அரிசியின் விலை அதிகரித்தால் பி40 மக்களின் நிலை என்ன என பல கேள்விகள் எழும்.

ஆகவே, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles