29.4 C
Kuala Lumpur
Friday, June 26, 2026

Vetri

இந்தோனேசிய பிரஜைகள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து  அரசாங்கம் முழுமையான, வெளிப்படையான விசாரணையை நடத்தும்: பிரதமர்

🔥 Views : 10
👁 Reading Now : 48

இந்தோனேசிய பிரஜைகள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து  அரசாங்கம் முழுமையான, வெளிப்படையான விசாரணையை நடத்தும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உறுதியை அளித்தார்.

ஜனவரி 24 அன்று சிலாங்கூரில் உள்ள தஞ்சோங் ரு நீர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இந்தோனேசிய பிரஜைகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஜாகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மலேசியர்கள் எந்த விதத்திலும் எதிர்வினையாற்ற வேண்டாம்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தரப்பினரும் தன்னிச்சையான நீதிபதிகளாக இருக்க வேண்டாம்.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் அறிக்கையை நான் பின்பற்றுகிறேன். அவர் நிச்சயமாக கவலைப்படுகிறார்.

குறிப்பாக அவர் முழுமையான விசாரணையைக் கேட்டார்.

இந்தோனேசியா ஒரு நட்பு நாடு.

எனவே எங்கள் விசாரணை முழுமையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும்.

யாரையும் பாதுகாக்காது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்று பிரதமர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles