32.5 C
Kuala Lumpur
Friday, May 1, 2026

Vetri

ZERO B40 – வறுமையற்ற எதிர்கால இந்திய சமுதாயம்! ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் புதிய இலக்கு!

அரசாங்கத்தின் இ காசே தரவு பட்டியலில் இடம் பெற்றுள்ள பி40 வறுமைக் கோட்டின் கீழ் பதிவு பெற்ற இந்திய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் இலவசமாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று திரு சுரேன் கந்தா தெரிவித்தார். அந்த வகையில் பி பி ஆர் கம்பு முகி பாவை சேர்ந்த படிவம் இரண்டில் படிக்கும் மாணவன் யுவன் மணிராஜ் அவர்களுக்கு இலவசமாக ஸ்ரீ முருகன் கல்நிலையத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தனது பாட்டியின் அரவணைப்பில் இரண்டு சகோதரர்களுடன் வசித்து வருகின்றார். மிகவும் குறைந்த மாத வருமானத்தை இவரது பாட்டி பெற்று வந்தாலும் கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் யுவன் மணிராச்சிற்க்கு இருந்து வருகிறது.

இதனைக் கேள்விப்பட்ட ஸ்ரீ முருகன் கல்வ நிலையத்தினர் ஜீரோ பி ஓ டி திட்டத்தில் இவரை இணைத்துக் கொண்டு இன்று அவரது வீட்டிற்கு வருகை தந்து அந்த மாணவருக்கு கல்வி கற்க தேவையான தளவாடங்களையும் பெற்றுக்கொடுத்து அவரை ஸ்ரீமுகன் நிலையத்தில் இலவச மாக கல்வி கற்க இணைத்துக் கொண்டனர். இந்த இலவச கல்வி திட்டத்தில் வறுமைக்கோட்டில் வாழும் இந்திய மாணவர்கள் பங்கு பெற்று பயனடைய பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் ஸ்ரீ முருகன் நிலையத்தை பூச்சியம் ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று இரண்டு இரண்டு ஒன்பது நான்கு ஆறு நான்கு எங்களில் தொடர்பு கொள்ளலாம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles