
நமது மலேசியா எம்.ஜி.ஆர் பொது நல மன்றம். இப்போது புதிய இலட்சியத்துடன், மேம்பட்ட நோக்கத்துடன் Persatuan Harapan India Malaysia (MyNEEDS) என மாற்றப்பட்டுள்ளது.
MyNEEDS – மலேசியா இந்தியர்களின் தேவைகள் மற்றும் முன்னேற்றம் (Malaysia Indian Needs for Empowerment, Education, Development & Sustainability)
இந்த சங்கத்தின் பிரதான நோக்கம் மலேசியா இந்தியர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. இந்திய சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களை அடையாளம் கண்டு, அவற்றை தீர்க்க உதவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நாங்கள் ஒன்றாக இணைந்து, ஒற்றுமையுடன், எதிர்கால சந்ததியினரை மேம்படுத்த முடியும். MyNEEDS மூலம், நமது சமூகத்திற்கான தேவைகளை சரியான வழியில் நிறைவேற்ற முயல்கிறோம்.
அனைவரும் எங்கள் இயக்கத்தில் இணைந்து, முன்னேற்றப் பாதையில் ஒன்றாக செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
