
நாட்டு மக்களுக்கு மிகவும் பரிச்சயமான உற்சாக சுவை பானத்தை வழங்கும் ‘போ’-BOH தேயிலை நிறுவனம், 60 ஆயிரம் பேருக்கு சுவை நீர் வழங்கும் முனைப்புடன் பத்து மலை திருத்தலத்தில் முகாமிட்டுள்ளது.
பத்து மலை தைப்பூச திருவிழா ஒரு சமய விழா மட்டுமல்ல; லட்சக்கணக்கான பக்தர்களையும் பொதுமக்களையும் கவர்ந்திழுக்கும் ஒரு ஒரு சுற்றுலா நிகழ்வாகவும் விளங்குகிறது..
மக்களிடையே ஒற்றுமை, உறுதி, ஒருமைப்பாடு ஆகிய பண்பு நலன்களை ஏற்படுத்தும் இந்த விழாவில் போ தேயிலை நிறுவனமும் பங்கெடுத்துக் கொள்கிறது.

இதன் தொடர்பில் பத்துமலை வளாகத்தில் கூடாரம் அமைத்துள்ள போ தேயிலை நிறுவன பணியாளர்கள் நேற்று பிப்ரவரி 10 திங்கட்கிழமை மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இன்முகத்துடன் சுவைமிகு தேநீரை வழங்கி உபசரித்தனர்.
அதைப்போல இன்றும் பொது மக்களுக்கும் பக்த அன்பர்களுக்கும் சூடான சுவையான தேனீரை போ நிறுவனத்தின் பணியாளர்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் வழங்கி வருகின்றனர்.
இப்படி 60 ஆயிரம் பேருக்கு தேநீர் வழங்கும் அதேவேளை, எளிய சமூக விளையாட்டுகளையும் ஏற்பாடு செய்து அதில் பங்கெடுப்போருக்கு மசாலை தேநீரை வழங்கவும் போ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
தவிர தேயிலைத் தூள் விற்பனைமூலம் கிடைக்கின்ற நிதியில் இங்குள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு குறிப்பாக தமிழ் பள்ளிகளில் தகவல் பல் ஊடக வசதியை ஏற்படுத்துவதற்காக நிதியை வழங்கவும் போ நிறுவனம் எண்ணம் கொண்டுள்ளது.
இதன் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள போ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் ஃபூ-Jason Foo, “பத்து மலையில் அணி திரளும் பக்தர்களின் இன்ப வெள்ளத்தில் போ தேயிலை நிறுவனமும் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறது” என்று கூறியிருக்கிறார். தவிர, இங்கு வழங்கப்படும் தேநீரை பக்தர்கள் பருகி இன்புறும் அதேவேளை, மலிவான விலையில் விற்பனை செய்யப்படும் தேயிலைத்தூள் பொட்டலங்களையும் வாங்கி ஆதரவளிக்கும்படியும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறார்.
