
ஜொகூரின் தென் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பேருந்து-டிராம் (bus-tram) கட்டமைப்பை நிறுவவிற்பதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
நீண்டகாலமாகப் பேருந்து-டிராம் (bus-tram) கட்டமைப்பு அல்லது இலகு ரயில் சேவை (LRT) இரண்டில் எதைத் தெரிவுசெய்வது என்ற விவாதம் நிலவி வந்தது.
தனிப்பட்ட சாலைத் தடங்களுடன் இயங்கும் பேருந்து-டிராம் கட்டமைப்பு இலகு ரயில் சேவையைக் காட்டிலும் நீக்குப்போக்காக இருக்கும் என்று லோக் கூறினார்.
மேலும் குறுகிய காலத்திற்குள் அதன் கட்டுமானப் பணிகளை முடிக்கமுடியும் என்பதாலும் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
2026-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சரவாக் மாநிலத்தில் முதல் பேருந்து-டிராம் சேவை இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
