28.5 C
Kuala Lumpur
Thursday, June 25, 2026

Vetri

டம்மி சீட் பெல்ட் மிகவும் ஆபத்தானது: முகைதீன் அப்துல் காதர் எச்சரிக்கை 

🔥 Views : 11
👁 Reading Now : 43

போக்குவரத்து அமைச்சும் உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவு அமைச்சும் சீட் பெல்ட் அலாரங்களை செயலிழக்கச் செய்யப் பயன்படுத்தப்படும் போலி கொக்கிகளின் விற்பனையை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.

டம்மி  அல்லது போலி கொக்கிகளின் விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (MIROS) போலி கொக்கி சீட் பெல்ட், அலாராத்தை நிறுத்துவதற்கு இதனை பயன்படுத்துவதற்கு எதிராக ஓர் எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது.

“கடந்த பத்தாண்டுகளில் பாதிக்கப்பட்டவர்கள் சீட் பெல்ட்களை அணியாமல் இருந்ததால் ஏற்பட்ட மரண எண்ணிக்கையை வெளியிடுமாறு ஒரு சாலை பாதுகாப்பு ஆர்வலர் அரசாங்கத்தையும் காவல்துறையையும் வலியுறுத்தியுள்ளார்” என்று மீரோஸ் சுட்டிக்காட்டியது. 

மீரோஸின் கூற்றுப்படி, இந்த துணைக்கருவி, ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு கூறுகளின் உகந்த செயல்பாட்டை சீர்குலைத்து, மோதல் ஏற்பட்டால் ஓட்டுநர், பயணிகள் இருவரின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles