25.5 C
Kuala Lumpur
Thursday, September 17, 2026

Vetri

கேமரன்மலை தூய்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

🔥 Views : 56
👁 Reading Now : 31

கேமரன்மலைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பகாங் சுல்தான், அல் சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீன் இந்த உத்தரவை வழங்கினார்.

கேமரன்மலை போன்ற சுற்றுலாப் பகுதிகளுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இதற்கு அனைவரும் குறிப்பாக வர்த்தகர்கள் தூய்மை அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தூய்மை தொடர்பான விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.

விற்கப்படும் ஒவ்வொரு உணவும் நல்ல நிலையில் இருப்பதையும், மாசுபடாமல் இருப்பதையும் உறுதி செய்வதன் மூலம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

உணவுகளை மூடி வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வடிகால்கள் உட்பட சுற்றியுள்ள பகுதியை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். 

போதுமான குப்பைத் தொட்டிகளை வழங்குங்கள் என்று இன்று பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட ஒரு பதிவில் சுல்தான் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles