
பஹ்ரைனிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கு இன்று பேரரசர் சுல்தான் இப்ராஹிமைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விவகாரங்களைப் பிரதமர் பேரரசரிடம் முன் வைத்தார்.
பின், பேரரசர் அண்மைய உடல்நிலை குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.
பஹ்ரைனின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான சல்மான் ஹமத் அல் கலீஃபாவின் அழைப்பின் பேரில் அன்வர் அதிகாரப்பூர்வ பயணமாக பஹ்ரைனுக்குச் சென்றுள்ளார்.
முன்னதாக, சிகிச்சை சுமூகமான முறையில் நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி 21-ஆம் தேதி பேரரசர் சுல்தான் இப்ராஹிம் நாடு திரும்புவதாக இஸ்தானா நெகாரா தெரிவித்தது.
