
பண்டார் செந்தோசா திட்டம் இப்பகுதி மக்களுக்கு மிகப் பெரிய உருமாற்றத்தை கொடுக்கும்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தாமான் செந்தோசாவை பண்டார் செந்தோசாவாக அந்தஸ்து உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அம் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கண்டு தற்போது அதிகாரப்பூர்வமாக பண்டார் செந்தோசாவாக பெயர் மாற்றம் கண்டுள்ளது.
டத்தோ பண்டார் இன்று அதிகாரப்பூர்வமாக பண்டார் செந்தோசாவை அறிமுகம் செய்தார்.
அதே வேளையில் இந்த பகுதியில் நிலவும் வெள்ளை பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
அவரின் இந்த அறிவிப்பு இந்த பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
காரணம் இங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக இந்த வெள்ளப் பிரச்சினையை நோக்கி வருகின்றனர்.
தற்போது அதற்கு ஒரு தீர்வு காணப்பட உள்ளது.
மேலும் பண்டார் செந்தோசாவாக அந்தஸ்து உயர்த்தப்படுவது இங்குள்ள மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும். இப் பகுதியில் உள்ள சொத்துடமைகளின் மதிப்பு உயரும்.
வெள்ள உட்பட இதர பிரச்சினைகளுக்கு கிள்ளான் மாநகர் மன்றம் கவனம் செலுத்தும். போலிஸ் பாதுகாப்புகள் அதிகரிக்கப்படும்.
அதே வேளையில் இதர மேம்பாட்டு திட்டங்களும் இங்கு கொண்டு வரப்படும். குறிப்பாக தாமான் செந்தோசாவின் அடையாளம் மாறும். மக்களின் சிந்தனையும் மாறும்.
குறிப்பாக இங்குள்ள மக்களுக்கு மிகப்பெரிய உருமாற்றத்தை கொடுக்கும் என்று குணராஜ் கூறினார்.
