
ரமலான் மாதத்தில் அரசு ஊழியர்கள் விரைவாக வீடு திரும்புவதற்கு அனுமதி வழங்குவது குறித்துச் சிலாங்கூர் அரசாங்கம் பரிசீலிக்கத் தயாராக உள்ளது என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்தப் பரிந்துரை விரைவில் மாநில ஆட்சிக் குழுவில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
அவசியம் ஏற்பட்டால் நாங்கள் மாநில ஆட்சிக் குழுவில் அது குறித்து விவாதிப்போம்.
ஆனால் இதுவரை நாங்கள் நிர்ணயித்த நேரம் அவர்கள் வேலை செய்து வீடு திரும்புவதற்கு போதுமானது என அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் சீக்கிரமாக புறப்பட்டால் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சீக்கிரமாக வேலைக்கு வர வேண்டும்.
இதன் வழி உணவு தயாரிப்பது போன்ற பொறுப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.



