
இணையம் மற்றும் சமூக ஊடகத்தை வழங்கும் மூன்று சமூக ஊடக நிறுவனங்களே சமூக ஊடகங்களுக்கான உரிமத்தைப் பெற்றுள்ளதாக தகவல், தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்
வீ செட், டிக்டாக், மற்றும் தெலிகிரேம் ஆகிய செயலிகள் யாவும் அந்த நிறுவனங்கள் என்று தியோ நீ சிங் பட்டியலிட்டார். கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் டிக்டாக் செயலிக்கு சமூக ஊடகம் உரிமம் வழங்கப்பட்டது என்று அவர் மக்களைவையில் தெரிவித்தார்
இந்த சமூக ஊடக உரிமங்கள் யாவும் தொடர்பு, பல்லூடக சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன
இந்நிலையில் உரிமம் இல்லாமல் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் நடவடிக்கை எடுக்க செக்ஷன் 126 சட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்படுவதாக அவர் சொன்னார்
